ஜம்மு காஷ்மீரில் 9 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை

ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-04-22 08:40 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரில் இன்று 9 இடங்களில் தேசிய புலனாய்வு படை அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பயங்கரவாதிகளுடன் தொடர்பு, பயங்கரவாத அமைப்புகளின் வளர்ச்சிக்கு நிதி திரட்டுதல், பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஸ்ரீநகரில் உள்ள கலம்தான் போராவை சேர்ந்த முசாமில் ஷபி கான் (25) என்பவரது வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் ரெவ்லான் இந்தியா என்ற அழகுசாதன நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

மேலும் ஓய்வுபெற்ற அரசு பேருந்து ஊழியரான முஷ்டாக் அகமது தார் என்பவரின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதுதவிர மேலும் பல இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஏற்கனவே மத்திய படை பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சோதனையில் துணை ராணுவத்தினர், மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோகர்நாக் என்கவுன்ட்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு தற்போது இந்த சோதனை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்