விரைவான செய்தியை விட அதன் உண்மை தன்மை மிக முக்கியம்: மத்திய மந்திரி பேச்சு

விரைவான செய்தி கொடுப்பது முக்கியம் என்பதோடு, அதன் உண்மை தன்மை மிக முக்கியம் என மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறியுள்ளார்.

Update: 2022-11-29 11:00 GMT



புதுடெல்லி,


ஆசிய-பசிபிக் ஒளிபரப்புக்கான ஐக்கிய பொது சபை-2022 என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மந்திரி அனுராக் தாகுர் இன்று கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசும்போது, ஒரு செய்தியை கொடுக்கும்போது அதன் வேகம் எவ்வளவு முக்கியமோ, அதனை விட துல்லிய தன்மை மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதனை தகவல் அளிப்போர் முதன்மையாக நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

சமூக ஊடக பரவலின் வழியே, போலியான செய்திகளும் அதிகம் பகிரப்படுகின்றன என்று அவர் கூறியுள்ளார். மத்திய அரசின் பத்திரிகை தகவல் ஆணையத்தில் உண்மை கண்டறியும் அமைப்பு ஒன்றை அரசு நிறுவியுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யாமல் வெளியிடப்படும் தகவல்களை எதிர்கொண்டு, மக்களுக்கு உண்மை நிகழ்வு தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களின் நம்பிக்கை கெடாமல் அதனை பராமரிப்பது என்பது பொறுப்புள்ள ஊடக நிறுவனங்களின் உயரிய வழிகாட்டி கொள்கையாக இருக்கும் என்று அவர் சுட்டி காட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்