பெங்களூருவில் நடக்க இருந்த இம்ரான்கான் பற்றிய புத்தக வெளியீடு நிகழ்ச்சி ரத்து
பெங்களூருவில் நடக்க இருந்த இம்ரான்கான் பற்றிய புத்தக வெளியீடு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
பெங்களூரு: பெங்களூருவை சேர்ந்த எழுத்தாளர் சுதாகர் என்பவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வாழ்க்கையை பற்றி சுயசரிதை புத்தகம் எழுதி இருந்தார். அந்த புத்தகத்தின் வெளியீடு நிகழ்ச்சி பெங்களூரு ஞானபாரதி மல்லடஹள்ளி பகுதியில் நேற்று முன்தினம் நடக்க இருந்தது.
இதுபற்றி அறிந்ததும் இந்து அமைப்பினர் ஞானபாரதி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தனர். அந்த புகாரில் புல்வாமாவில் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வாழ்க்கை பற்றிய சுயசரிதை புத்தகத்தை வெளியிட உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என்று கூறி இருந்தனர். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு எதிராக இந்து அமைப்பினர் போராட்டமும் நடத்தினர். இதனால் புத்தக வெளியீடு நிகழ்ச்சிக்கு வழங்கிய அனுமதியை போலீசார் ரத்து செய்தனர்.