சித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர் தான்; ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சொல்கிறார்
சித்தராமையா கார் மீது முட்டை வீசியது காங்கிரஸ் கட்சியினர் தான் என ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சொல்கிறார்.;
சிக்கமகளூரு;
தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ரேணுகாச்சார்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குடகு மாவட்டம் மடிகேரிக்கு சென்ற சித்தராமையாவின் கார் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்துள்ளது. சித்தராமையாவின் கார் மீது முட்டை வீசியவர்கள் பா.ஜனதாவினர் இல்லை.
காங்கிரஸ் கட்சியினர் தான் அவரது கார் மீது முட்டை வீசி உள்ளனர். இந்த செயலை காங்கிரஸ் கட்சியினர் செய்துவிட்டு, பா.ஜனதாவினர் செய்ததாக கூறுகிறார்கள். வேண்டுமென்றே பா.ஜனதா கட்சியின் மீது அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
பா.ஜனதாவினர் இத்தகைய கீழ்தரமான அரசியல் ெசய்யமாட்டார்கள். இதுபோன்ற செயலிலும் பா.ஜனதாவினர் ஈடுபட மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.