கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்
கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
மும்பை,
மராட்டிய மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ராட்சத கிரேன் இயந்திரம் சரிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தானேவில் பாலம் கட்டும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில், உயிரிழந்த 17 பேரில் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த கண்ணன் ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.