ஓசோன் படலத்தை காப்பாற்றுவது நமது கடமை மண்டியா துணை கலெக்டர் எச்.எல்.நாகராஜ் பேட்டி

ஒசோன் படலத்தை காப்பாற்றுவது நமது கடமை மண்டியா துணை கலெக்டர் எச்.எல்.நாகராஜ் என்று தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-17 18:45 GMT

மண்டியா:

மண்டியா மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் உள்ள காவிரி பூங்காவில் மாசுக்கட்டுபாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் துணை கலெக்டர் எச்.எல்.நாகராஜ் தலைமையில் நடந்தது. அப்போது துணை கலெக்டர் நாகராஜ் கூறியதாவது:-

தட்ப வெட்ப நிலை மாறுப்பட்டு காணப்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஒசோன் படத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீர், நிலம், நெருப்பு, காற்று உள்பட 5 புலங்களை யாராலும் அடக்க முடியாது. இதனை நாம் கட்டுப்படுத்த நிைனக்கும்போது இயற்கைச் சீற்றம் காணப்படுகிறது. பல லட்சம் கோடி மக்கள் வசி்த்து வரும் இ்ந்த பூமியில் இயற்கையை அழிக்கும் முயற்சியை கைவிடவேண்டும். மாறாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபடவேண்டும். இதனால் வளிமண்டலத்தையும் காப்பாற்ற முடியும், இயற்கையையும் பேணி பாதுகாக்க முடியும். இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவர்களின் ஓவியப்போட்டி அமைந்துள்ளது. இதற்கு எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்