அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - டெல்லி மந்திரி அதிஷி

கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதையொட்டி, இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என டெல்லி சட்டத்துறை மந்திரி கைலாஷ் கெலாட் கூறியுள்ளார்.;

Update: 2024-05-10 13:09 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜுன் 1-ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்ததையடுத்து ஆம் ஆத்மி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் டெல்லி மந்திரி அதிஷி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

இது ஆம் ஆத்மிக்கு மட்டுமல்ல,ஒட்டு மொத்த நாட்டிற்கும் ஒரு வரலாற்று சிறப்பு நாள் ஆகும். சர்வாதிகார நாடாக மாற்ற பா.ஜ.க எந்த ஒரு கல்லையும் விட்டு வைக்கவில்லை. இந்த சர்வாதிகாரம் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை சுப்ரீம் கோர்ட்டின் அறிவிப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி என்றார்.

அதனை தொடர்ந்து, டெல்லி சட்ட மந்திரி கைலாஷ் கெலாட் கூறுகையில், நீதி வழங்கிய சுப்ரீம் கோர்ட்டிற்கு நான் நன்றி கூறுகிறேன். இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்