பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை

பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசினால் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-12-11 18:45 GMT

மங்களூரு:

கடும் நடவடிக்கை

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கலந்துகொண்டார். முன்னதாக பெங்களூருவில் இருந்து விமானம் மங்களூருவுக்கு வந்த அவர், மங்களூரு விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மந்திரி அரக ஞானேந்திரா கூறியதாவது:-

சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் யாராவது பேசினால் அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.

போலீசாருக்கு ஒத்துழைப்பு

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்காமல் தடுக்க பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தட்சிண கன்னடா மாவட்டத்தை பொறுத்தவரை தற்போது எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. போலீசாரின் தீவிர நடவடிக்கையால் பொதுமக்கள் அமைதியாக உள்ளனர். சட்டத்தை யாரும் கையில் எடுக்க வேண்டாம்.

பயங்கரவாத செயல்களில் ஈடுபட திட்டமிடுபவர்கள், பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருப்பவர்கள் பற்றி தெரிந்தால் பொதுமக்கள் போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்