வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க முடிவு...!

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வந்தனர்.;

Update: 2023-12-08 12:18 GMT

மும்பை, 

பொதுத்துறை வங்கி ஊழியர்கள் ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதில் ஏற்கனவே சனிக்கிழமை விடுமுறை வழங்க  இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீத ஊதிய உயர்வு வழங்க இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கம் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு கடந்த 2022 நவம்பர் 1-ம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலாகும்.

இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். ஊதிய உயர்வு ஒப்பந்தத்தால் வங்கிகளுக்கு ரூ.12,449 கோடி கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்