விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்ததா? சந்திரயான்-2 ஆர்பிட்டர்!

சந்திரயான் - 2 ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ பகிர்ந்த பதிவு எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கியது.

Update: 2023-08-25 04:41 GMT

பெங்களூரு,

சந்திரயான்-3 விண்கலத்துடன் இணைக்கப்பட்டிருந்த லேண்டர் நேற்று முன்தினம் தரையிறங்கிய நிலையில், அதன் வயிற்றுப்பகுதியில் இருந்து ரோவரும் பிரிந்து வெளியேறியது. இந்த நிலையில் விண்கலத்தின் அனைத்து கருவிகளும் செயல்பாட்டுக்கு வந்து விட்டதாக இஸ்ரோ நேற்று அறிவித்து உள்ளது. இதில் முக்கியமாக நிலவின் தரைப்பகுதியில் ரோவரின் இயக்கம் நேற்று தொடங்கியது. இதைப்போல லேண்டரில் இருந்த இல்சா, ரம்பா, காஸ்டே போன்ற கருவிகள் நேற்று இயக்கி வைக்கப்பட்டன.

இந்தநிலையில், ஆகஸ்ட் 23-ல் நிலவில் தரையிறங்கிய சந்திரயான் - 3 லேண்டரை அழகாக படம்பிடித்துள்ளது சந்திரயான் - 2 வின் ஆர்பிட்டரில் பொருத்தப்பட்டுள்ள கேமரா. நிலவில் இருக்கும் கேமராக்களிலேயே மிகவும் துல்லியமான கேமரா இது தான் என இஸ்ரோ பெருமிதம் தெரிவித்துள்ளது.

தற்போது சந்திரயான் - 2 ஆர்பிட்டர், விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்ததாக இஸ்ரோ பகிர்ந்த பதிவு எக்ஸ் தளத்தில் இருந்து நீக்கியது.


Tags:    

மேலும் செய்திகள்