இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதா? - மத்திய மந்திரி தோமர் பதில்
இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து மக்களவையில் மத்திய மந்திரி தோமர் பதில் அளித்தார்.;
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் இன்றைக்கான கேள்வி நேரத்தின் போது பருவநிலை காரணமாக இந்தியாவின் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த கேள்விக்கு மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் பதில் அளித்து கூறுகையில், 2017-2018-ம் ஆண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி 285 மில்லியன் டன்னாக இருந்தது.
ஆனால் கடந்த 2020-21-ம் நிதியாண்டில் 310.74 மில்லியன் டன்னாகவும், 2021-2022-ம் நிதியாண்டில் 315.72 மில்லியன் டன்னாகவும் உயர்ந்துள்ளதாக எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். மேலும் இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி பாதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார்.