இரட்டை இலை சின்னம்: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக்கூடாது என சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்.;

Update: 2024-03-11 13:50 GMT

புதுடெல்லி,

உள்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக உள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தேர்தல் ஆணையத்திற்கு மனு அனுப்பினார்.

இதனை தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று சென்னை ஐகோர்ட்டிலும் கடந்த மாதம் 28-ம் தேதி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில், இரட்டை இலை சின்னம் தொடர்பாக சூரியமூர்த்தி என்பவர் அளித்த மனு மீது பதில் அளிக்குமாறு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இந்திய தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்