7 ஆண்டுகளாக மிரட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; அத்தை உள்பட 14 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

7 ஆண்டுகளாக மிரட்டி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை ெசய்த அத்தை உள்பட 14 பேர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-09-30 18:45 GMT

மங்களூரு;

பாலியல் வன்கொடுமை

தட்சிண கன்னடா மாவட்டம் சுப்பிரமணியாவை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் சுப்பிரமணியா போலீசில் புகார் ஒன்று கொடுத்தார். அதில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு இடங்களில், பலரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுப்பிரமணியா போலீசார் விசாரித்தனர். அப்போது, அந்த சிறுமிக்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் தற்போது வரை 7 ஆண்டுகளாக மிரட்டி பலரால் பாலியல் வன்கொடுமை ெசய்யப்பட்டது ெதரியவந்தது. அவரது அத்தையான வேதவதி என்பவர் சிறுமி 5-ம் வகுப்பு படிக்கும்போது முதல் முதலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

14 பேர் மீது போக்சோ

பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமியை பல்வேறு இடங்களில் வைத்து பலர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி உள்ளனர். மேலும் இதுபற்றி வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியா போலீசார், சிறுமியின் அத்தை வேதவதி, வினோத், பிரவீன், தயானந்தா, அனுமந்தா, ஆனந்தா, பிரதீப், அச்சுதா, சதீஷ் கவுடா, ஜெயப்பிரகாஷ், அவரது தம்பி ஜெயப்பிரகாஷ், மங்கு மற்றும் 2 பேர் என மொத்தம் 14 பேர் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்