தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு..!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-07-24 09:01 GMT

சென்னை,

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான (இ.பி.எப்) வட்டி விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்ற இறக்கமாக உள்ளது. தற்போதுவரை இதற்கான வட்டி விகிதம் 8.10 சதவீதமாக இருந்தது.

இந்த நிலையில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தற்போது இந்த வட்டி விகிதமானது 8.10 சதவீதத்தில் இருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்