இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறை சுட்டிக்காட்டிய இந்திய மாணவனுக்கு ரூ.38 லட்சம் பரிசு

இந்திய மாணவனுக்கு மெட்டா நிறுவனம் ரூ.38 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

Update: 2022-09-19 12:23 GMT

ஜெய்ப்பூர்,

பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம். பிறருக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவது தொடங்கி இதில் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மீம்ஸ், பொழுதுபோக்கு வீடியோக்கள், ரீல்ஸ் போன்ற பலவற்றையும் காணலாம்.

பல அம்சங்களை உள்ளடக்கி உள்ளதால் இன்ஸ்டாகிராமில் தொழில்நுட்ப கோளாறுகள் (பக்) இருக்கும் . பின்னர் அதற்கு ஏற்ற வகையில் அப்டேட்களும் வெளியாகும். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் உள்ள ஒரு தொழில்நுட்ப கோளாறை கண்டுபிடித்த இந்திய மாணவனுக்கு மெட்டா நிறுவனம் ரூ.38 லட்சம் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த மாணவன் நீரஜ் சர்மா. இவர், பயனர்களின் இன்ஸ்டாகிராம் ரீல்ஸின் "தம்ப்நெயில்"-ஐ (Thumbail) ஒருவரது ஐடி மற்றும் கடவுச்சொல் இல்லாமல் யார் வேண்டுமானாலும் மாற்றலாம் என இருந்த தொழில்நுட்ப கோளாறை கண்டு பிடித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் நிறுவனத்துக்கு கடந்த ஜனவரி மாதம் இமெயில் அனுப்பியுள்ளார். பின்னர் கடந்த மே மாதம் அவரது அறிக்கையை ஏற்றுக்கொண்ட மெட்டா நிறுவனம் அவருக்கு 45 ஆயிரம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில்சுமார் ரூ. 35 லட்சம்) வெகுமதியை அளிப்பதாக தெரிவித்து உள்ளனர். பின்னர் வெகுமதி வழங்குவதில் நான்கு மாதங்கள் ஏற்பட்ட தாமதத்திற்குப் கூடுதலாக 4500 டாலர்களை (சுமார் ரூ. 3 லட்சம்) மெட்டா நிறுவனம் போனஸாக நீரஜ் சர்மாவிற்கு வழங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்