பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட முயற்சி முக்கியம்: யோகி ஆதித்யநாத்

வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட முயற்சி முக்கியமானது என்று உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

Update: 2022-08-14 09:36 GMT

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தரபிரதேசத்தில் ஊர்க்காவல் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திரங்கா மார்ச் மோட்டார் சைக்கிள் பேரணியின் நிறைவு விழாவில் அம்மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:-

வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட முயற்சி முக்கியம். எனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் எனது குடும்ப வாழ்க்கையை விட சமூகம் முக்கியம் என்ற உணர்வுடன் நாம் பணியாற்றும்போது, ​​​​இந்தியா உலகின் மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.

"ஒவ்வொரு குடிமகனுக்கும் நாட்டின் மீது பொறுப்பு உள்ளது. நமது இருப்பிடமும் நமது அடையாளமும் நமது நாட்டினால் தான், நமது நாடு பாதுகாப்பாக இருந்தால் மட்டுமே நம்மால்பாதுகாப்பாக இருக்க முடியும்.

கொரோனா காலங்களில் பிரதமர் மோடி தலைமையிலான நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டது. அவரது தலைமையில் கீழ் சுகாதாரப் பணியாளர்கள், நிர்வாகம், காவல்துறை மற்றும் ஊர்க்காவல்படையினர் தங்கள் பணியினை சிறப்பாக செய்து சரியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தனர்.

"பிரதமர் அடுத்த 25 ஆண்டுகளுக்கு ஒரு 'அமிர்த காலத்தை' நம் முன் வைத்துள்ளார். வளமான மற்றும் பாதுகாப்பான இந்தியாவுக்கு, ஒவ்வொரு நபரும் தனிப்பட்ட அளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஒருவர் தனது பொறுப்புகளை நேர்மையுடன் நிறைவேற்ற வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்