6 பயணிகளை ஏற்றாமல் முன்னதாகவே சென்ற விமானம்-பெங்களூரு விமான நிலையத்தில் பரபரப்பு

அந்த விமானம் வழக்கமாக 2.55 மணிக்கு புறப்படுவதற்கு மாற்றாக 12 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டது.;

Update: 2023-08-06 14:43 GMT

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் பகுதியில் கெம்பேகவுடா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து மங்களூருவுக்கு புறப்பட விமானம் ஒன்று தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க காத்திருந்த பயணிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் அந்த விமானம் வழக்கமாக 2.55 மணிக்கு புறப்படுவதற்கு மாற்றாக 12 நிமிடங்கள் முன்னதாக புறப்பட்டது.

இதனால் 6 பயணிகள் விமானத்தை தவறவிட்டனர். இதுகுறித்து அறிந்த அந்த பயணிகள், விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பயணிகள் 6 மணி நேரம் காத்திருந்து மற்றொரு விமானத்தில் பயணித்தனர்.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரியிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் ஐதராபாத்திற்கு புறப்பட்ட விமானத்தை, கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் தவறிவிட்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்