பாட்டி இறந்த துக்கத்தில் விமானத்தை இயக்க மறுத்த விமானி

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாக விமானி கூறியுள்ளார்.;

Update: 2024-01-18 15:21 GMT

புனே,

இந்தியாவில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வரும் இன்டிகோ விமானம். இந்தநிலையில் பாட்னாவில் இருந்து புனேவுக்கு செல்லும் இன்டிகோ விமானத்தை இயக்கிய விமானி ஒருவர், தன் பாட்டி இறந்த துக்க செய்தியை கேட்டு தாங்க முடியாமல், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மீண்டும் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தால், இன்று மதியம் 1.25 மணிக்கு புறப்பட வேண்டிய விமானம், வேறு விமானியின் மூலம் 4.41 மணிக்கு இயக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்ததாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்