"சாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்தத் தவறினால்..." - ராகுல் காந்தி எச்சரிக்கை
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டிய நேரம் வந்து விட்டது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த தனியார் தொலைக்காட்சி நடத்திய ஆய்வை மேற்கோள்காட்டி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
மோடி ஜி, சாதிவாரிக் கணக்கெடுப்பை நீங்கள் நிறுத்த நினைப்பது கனவு போன்றது. இப்போது எந்த சக்தியாலும் இதை தடுக்க முடியாது!
இந்தியாவின் உத்தரவு வந்துவிட்டது - விரைவில் 90 சதவீத இந்தியர்கள் சாதிவாரி கணக்கெடுப்பை ஆதரித்து கோரிக்கை வைப்பார்கள்.
உத்தரவை இப்போதே நடைமுறைப்படுத்துங்கள், இல்லையேல் அடுத்த பிரதமர் இதை செயல்படுத்துவதை நீங்கள் பார்ப்பீர்கள்
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.