இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று உயர்வு - புதிதாக 4,510 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.;

Update: 2022-09-21 04:17 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 4,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்றைய பாதிப்பு 4,043 ஆக இருந்த நிலையில் இன்று 4,510 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 5,640 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,72,980 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 47,379 லிருந்து 46,216 ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 5,28,403 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 2,16,95,51,591 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்