உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்பு - சவுதி அரேபியா நடவடிக்கை
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட சூடானில் இருந்து 3 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு உள்ள சூடானில் இருந்து வெளிநாட்டு குடிமக்களை மீட்கும் பணிகளை அந்தந்த நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. அங்கு சிக்கியிருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்க மத்திய அரசும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.
இந்த நிலையில், சவுதி அரேபியா தனது குடிமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள விமானங்கள் மூலம் நட்பு நாடுகள் மற்றும் சகோதர நாடுகளை சேர்ந்த குடிமக்களையும் மீட்டு வருகிறது. அந்தவகையில் 66 வெளிநாட்டினரை நேற்று மீட்டுள்ளதாக அந்த நாடு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இதில் 3 பேர் இந்தியர்கள் ஆவர். சூடான் தலைநகர் கார்தூமில் சிக்கியிருந்த அவர்கள் மூவரும், சவுதி அரேபிய விமானத்தின் ஊழியர்கள் என கூறப்படுகிறது.