தாய்நாட்டிற்கு விசுவாசமாக குண்டடி பட்டும் பயங்கரவாதிகளுடன் போராடிய நாய்...! குவியும் பாராட்டு...!

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தில் உள்ள நாய் ஒன்று பயங்கரவாதிகளால் சுடப்பட்ட பின்னரும் போராடி அவர்களை பாதுகாப்புப் படையினரிடம் பிடித்துக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-10-11 05:23 GMT

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் தங்ப்வாரா எனும் பகுதியில் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் வந்தது. இதனையடுத்து அந்த வீட்டை நோக்கி ராணுவத்தில் பயிற்சிபெற்ற நாய் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டது. ஜூம் என்ற பெயர் கொண்ட அந்த நாய் மிகவும் ஆக்ரோஷமானது, ராணுவத்தினால் தீவிரமாக பயிற்சிபடுத்தப்பட்டதும் கூட. பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களை மட்டுப்படுத்த பழக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜூம் பயங்கரவாதிகள் இருந்த வீட்டிற்குள் நைசாக நுழைந்தது. இதனை கண்ட பயங்கரவாதிகள் அதன் மீது இரண்டு துப்பாக்கி குண்டுகளை துளைத்தனர். இருந்தாலும் பயங்கரவாதிகளை கடுமையாக தாக்கி அவர்களை நிலைகுலையச் செய்தது. அந்த இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். படுகாயங்களுடன் ஜூம் நாய் தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்