2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் - ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் பேசினார்.;
புனே,
மராட்டிய மாநிலம் புனேயில் 'டெபன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் அட்னான்ஸ்டு டெக்னாலஜி'யின் பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கி பேசியதாவது:-
உலகம் அதிவேக மாற்றத்தை கண்டு வருகிறது. பாதுகாப்பு துறையும் மாறி வருகிறது. இந்த துறையில் பல தொழில்நுட்ப மாற்றங்களை காண்கிறோம். மேலும் பாதுகாப்பு துறையில் பல பிரச்சினைகள் எழுகின்றன. குறிப்பாக சைபர்பேஸ் மிரட்டல்கள் அதிகரிக்கின்றன.மாற்றத்துக்கு ஏற்ப தொழில்நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும். தொழில்நுட்பத்தை மேம்படுத்த முயற்சிகள் முன்வைக்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி அதிகரித்து உள்ளது. 2014-ம் ஆண்டுக்கு முன்பு இந்த துறையில் ரூ.900 கோடியாக ஏற்றுமதி இருந்தது. அது தற்போது ரூ.16 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.பொருளாதார நிபுணர்களின் கணிப்பின்படி, 2027-ம் ஆண்டுக்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்தை பிடித்து சாதனை படைக்கும். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும். நமது நாடு தற்போது சுயசார்பு தன்னிறைவு பெற்று வருகிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியா முதல் இடத்தை பிடிப்பதையும் மறுக்க முடியாது என்று அவர் பேசினார்.