2030-ம் ஆண்டுக்குள் உருக்கு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் மத்திய மந்திரி சிந்தியா தகவல்
2030-ம் ஆண்டுக்குள் உருக்கு உற்பத்தி 2 மடங்காக அதிகரிக்கும் என மத்திய மந்திரி சிந்தியா தகவல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் இந்திய தொழில், வர்த்தக கூட்டமைப்பு (பிக்கி) நேற்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "இந்தியா உருக்கு ஏற்றுமதி செய்கிற நாடு மட்டுமல்ல, அதிகளவில் பயன்படுத்துகிற நாடும் ஆகும். 2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உருக்கு உற்பத்தி இரு மடங்காக (30 கோடி டன்) உயரும்" என தெரிவித்தார். மேலும், 2047-ம் ஆண்டுக்குள் தனிநபர் உருக்கு பயன்பாடு வளர்ந்து, உலகளவிலான சராசரியான 225 கிலோ என்ற நிலையை அடையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.