உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா முன்னேறும்; ரிசர்வ் வங்கி
இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சிறப்பாக செல்கிறது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலவரம் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது;-
உலக அளவில் ஏற்பட்டுள்ள எதிர்பாராத குழப்பங்களால் ஏற்பட்ட தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும் எதிரொலித்துள்ளது. இந்த தாக்கத்தால் சில துறைகள் பாதிப்பை சந்தித்துள்ளது. இருப்பினும், அதையும் மீறி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
சர்வதேச அளவில் பொருளாதார சரிவு என்ற சூழல் தென்பட்டாலும், இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற இலக்கை நோக்கி சிறப்பாக செல்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.