21 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இல்லை: ஒரு நாளில் 113 பேருக்கு தொற்று

21 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2023-02-05 19:15 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நமது நாட்டில் நேற்று முன்தினம் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று 113 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 649 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 83 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் நாட்டில் 21 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பாதிப்பே இல்லை. அவை, ஆந்திரா, ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், அசாம், உத்தரகாண்ட், ஜார்கண்ட், கோவா, மிசோரம், மணிப்பூர், திரிபுரா, சண்டிகார், மேகாலயா, அருணாசலபிரதேசம், சிக்கிம், நாகாலாந்து, லடாக், தத்ரா நகர் ஹவேலி டாமன் டையு, லட்சத்தீவு, அந்தமான் ஆகும்.

நேற்று கொரோனா தொற்றின் பிடியில் இருந்து 88 பேர் மீண்டனர். இதுவரை மொத்தம் 4 கோடியே 41 லட்சத்து 50 ஆயிரத்து 801 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தொற்றால் தொடர்ந்து 3 நாளாக நேற்றும் உயிர்ப்பலி இல்லை. இதுவரை பலியானோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 745 ஆக நீடிக்கிறது.

கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 25 உயர்ந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி நாட்டில் 1,817 பேர் கொரோனா மீட்பு சிகிச்சையில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்