இந்தியாவில் இத்தனை சதவீத மக்களிடம் கிரிப்டோ கரன்சியா?- வெளியான ஐ.நா அறிக்கை
டிஜிட்டல் நாணயங்களை அதிகமாக வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் உக்ரைன் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி,
டிஜிட்டல் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை அதிகரித்து வருவதால், பல நாடுகளை சேர்ந்தவர்களும் அதில் முதலீடு செய்வதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக கடந்த சில வருடங்களாக இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் டிஜிட்டல் நாணயத்தை கிரிப்டோகரன்சி வடிவில் அதிகமாக வைத்திருக்கும் நாடுகள் குறித்து ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2021 ஆம் ஆண்டில் ஏழு சதவீதத்திற்கும் (7.3) அதிகமான இந்தியர்கள் கிரிப்டோகரன்சி வைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் டிஜிட்டல் நாணயங்களை அதிகமாக வைத்திருக்கும் மக்கள் பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் உள்ளது. உக்ரைன் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் மக்கள் தொகையில் 12.7 சதவீதம் பேர் டிஜிட்டல் நாணயங்களை வைத்திருக்கின்றனர். 2-வது இடத்தில் ரஷ்யாவும், 6-வது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது.