உலக புதுமை குறியீடு தரவரிசையில் 40-வது இடத்தில் இந்தியா
உலக புதுமை குறியீடு தரவரிசையில் இந்தியா தனது 40-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.;
புதுடெல்லி,
ஜெனீவாவில் உள்ள உலக அறிவுசார் சொத்து அமைப்பு. ஆண்டுதோறும் உலக அளவில் புதுமை குறியீட்டு எண் தரவரிசையை வெளியிட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், 132 நாடுகள் கொண்ட பட்டியலில், இந்தியா தனது 40-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டும் 40-வது இடத்தில்தான் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு 81-வது இடத்தில் இருந்த இந்தியா, தொடர்ந்து முன்னேறி, 40-வது இடத்தை அடைந்திருப்பதாக 'நிதி ஆயோக்' தெரிவித்துள்ளது. அறிவு சார் மூலதனம், துடிப்பான ஸ்டார்ட்அப் திட்டம், பொது, தனியார் ஆராய்ச்சி அமைப்புகளின் பணிகள் ஆகியவற்றால் இடம் தக்க வைக்கப்பட்டதாக கூறியுள்ளது.