இந்தியாவில் மேலும் 9,355 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்த கொரோனா பாதிப்பு தற்போது ஏற்ற இறக்கமாக பதிவாகி வருகிறது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
இந்தியாவில் மேலும் 9,355 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 57,410 ஆக சரிந்துள்ளது. கொரோனா பாதிப்பால் மேலும் 26 பேர் பலியாகியுள்ளனர். கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 424 ஆக உயர்ந்துள்ளது.