இந்தியா மிக பெரிய ஜனநாயக நாடு மட்டுமின்றி, ஜனநாயகத்தின் அன்னையாகவும் உள்ளது: பிரதமர் மோடி

கர்நாடகாவில் பிரதமர் மோடி பேசும்போது, இந்தியா மிக பெரிய ஜனநாயக நாடாக மட்டுமின்றி, ஜனநாயகத்தின் அன்னையாகவும் உள்ளது என கூறினார்.

Update: 2023-03-12 13:36 GMT



ஹப்பள்ளி,


கர்நாடகாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஹப்பள்ளி-தார்வாத் பகுதியில் உலகின் மிக நீள ரெயில்வே நடைமேடையை இன்று தொடங்கி வைத்தும், பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தும் பேசினார்.

அவர் உரையாற்றும்போது, தார்வாத்தில் உள்ள ஐ.ஐ.டி.யின் புதிய வளாகம் தரமிக்க கல்வியை வழங்கும். சிறந்த வருங்காலத்திற்காக இளம் மனங்களை வளர்த்தெடுக்கும். நம்முடைய நாட்டின் ஒவ்வொரு குடிமகளும் தரம் வாய்ந்த கல்வியை பெறுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கப்பெற வேண்டும்.

ஒரு நல்ல, நவீன உட்கட்டமைப்பு வாழ்க்கையை எளிமையாக்குவதுடன், அதனை மேம்படுத்தும். நமது சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் அதனால் பலனடைவர். கடந்த 9 ஆண்டுகளில் நவீன உட்கட்டமைப்பை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம் என்று பேசியுள்ளார்.

இதன்பின்னர் அவர், இந்தியாவின் ஜனநாயகம் பற்றி லண்டனில் இருந்து கேள்விகள் எழுப்பப்படுவது துரதிர்ஷ்டம் வாய்ந்தது. சில மனிதர்கள் இந்திய ஜனநாயகம் பற்றி தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்தியா மிக பெரிய ஜனநாயகம் மட்டுமின்றி, ஜனநாயகத்தின் அன்னையாகவும் உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, லண்டன் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலை கழகத்தில் பேசும்போது, தொடர்ச்சியாக மத்திய அரசுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தும், ஜனநாயகம் பற்றிய கேள்விகளை எழுப்பியும் உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்