'எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு' - ஜெய்சங்கர்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை மிகவும் குறைவு என மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-17 16:32 GMT

புதுடெல்லி,

டெல்லியில் நடைபெற்ற சி.ஐ.ஐ. வருடாந்திர தொழிலதிபர்கள் மாநாட்டில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நமது அண்டை நாடான பாகிஸ்தானை பொறுத்தவரை, அவர்கள் இடைவிடாமல் பயங்கரவாதத்தை நடைமுறைப்படுத்தி வந்தனர். நாமும் அதனுடனேயே வாழ வேண்டும் என்பதைப் போல் முன்பு நமது அணுகுமுறை இருந்து வந்தது.

ஆனால் 2014-ல் இந்த தேச மக்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்தார்கள். இந்தியாவில் தற்போது எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சகிப்புத்தன்மை மிகவும் குறைவாக இருக்கிறது. பயங்கரவாத தாக்குதல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்ற செய்தியை நாம் கொடுத்திருக்கிறோம்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்