இலங்கை - பாகிஸ்தான் போல பொருளாதார நெருக்கடி இந்தியாவுக்கு ஏற்படுமா? ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் விளக்கம்

இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது.;

Update: 2022-07-30 17:07 GMT

புதுடெல்லி,

இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலான நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா என்பது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை, பாகிஸ்தான் நாடுகளின் பொருளாதார நிலை இந்தியாவுக்கு ஏற்படுமா என்பது குறித்து அவர் கூறியதாவது:-

உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது. ஆனால், கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியதால், பணவீக்கம் குறைந்துள்ளது.நமது நாடு வெளிநாடுகளில் வாங்கியுள்ள கடன் அளவும் குறைவுதான்.

உலகில் உணவுப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களுக்கான பணவீக்கம்தான் அதிகமாகி இருப்பதாகவும், சர்வதேச அளவில் இந்த பணவீக்கம் குறையும்போது இந்தியாவிலும் குறையும்.

இந்தியாவில் அந்நியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவு இருக்கிறது. மேலும் அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சிறப்பாக பணியாற்றி உள்ளது.ஆகவே இலங்கை, பாகிஸ்தான் போன்ற நிலை இந்தியாவுக்கு ஏற்படாது.

இவ்வாறு ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்