மக்களை திசைதிருப்ப 'பாரதம்' சர்ச்சையை பா.ஜனதா எழுப்புகிறது: மல்லிகார்ஜுன கார்கே

இந்தியா கூட்டணியால் நடுக்கம் அடைந்துள்ள பா.ஜனதா, மக்களை திசைதிருப்ப ‘இந்தியா-பாரதம்’ சர்ச்சையை எழுப்புவதாக மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

Update: 2023-09-07 00:00 GMT

கோப்புப்படம்

ஜெய்ப்பூர்,

காங்கிரஸ் ஆட்சி நடக்கும் ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, அங்குள்ள பில்வாரா நகரில் நேற்று காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

கருத்தொற்றுமை கொண்ட எதிர்க்கட்சிகள் இணைந்த 'இந்தியா' கூட்டணியால், பா.ஜனதா நடுக்கம் அடைந்துள்ளது. நாங்கள் எப்போது எதை பேசினாலும், அதை களங்கப்படுத்தவோ அல்லது திசைதிருப்பவோ முயற்சிக்கிறது.

சர்ச்சை

உதாரணமாக, பாரதம் என்ற வார்த்தையை நாங்கள் ஏற்கனவே பயன்படுத்தி இருக்கிறோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 'பாரத ஒற்றுமை பயணம்' நடத்தினோம்.

ஆனால், பா.ஜனதாவோ ஏதோ ஒன்றை புதிதாக கொண்டுவருவது போல் காட்டிக்கொள்கிறது.

இந்தியா கூட்டணியால் நடுக்கம் அடைந்துள்ள நிலையில், மக்களை திசைதிருப்ப 'இந்தியா-பாரதம்' சர்ச்சையை பா.ஜனதா எழுப்பி வருகிறது என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்