தேர்தலில் சுயேட்சையாக போட்டியா?- நடிகை சுமலதா விளக்கம்

மண்டியா தொகுதியில் இப்போது பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் உள்ளது. எனவே பா.ஜனதா தலைவர்கள் உரிய முடிவை அறிவிப்பார்கள் என்று நடிகை சுமலதா கூறினார்.;

Update: 2024-02-26 09:34 GMT

பெங்களூர்,

கர்நாடகத்தில் உள்ள மண்டியா தொகுதி எம்.பி. யாக இருப்பவர் நடிகை சுமலதா. பா.ஜனதா ஆதரவுடன் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இதனால், வரும் தேர்தலிலும் சுமலதாவுக்கு பா.ஜனதா ஆதரவு அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மண்டியா தொகுதியை ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு ஒதுக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை சுமலதா தனது ஆதரவாளர்களுடன் பெங்களூரு வில் உள்ள தனது வீட்டில் ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து சுமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினேன். எனக்கு ஆதரவாக இருப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். கடந்த தேர்தலில் எனது வெற்றிக்கு நடிகர் தர்ஷன் காரணமாக இருந்தார். இப்போதும் எங்களுடன் இருப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலின்போது பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவித்தேன். மண்டியா தொகுதியில் இப்போது பா.ஜனதாவுக்கு சாதகமான சூழல் உள்ளது.

மண்டியா தொகுதி விஷயத்தில் பா.ஜனதா தலைவர்கள் உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள். நான் மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிடுவது குறித்து சிந்திக்கவில்லை.பா.ஜனதா 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும். பிரதமர் மோடி உலக தலைவராக திகழ்கிறார்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்