டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தின கொண்டாட்டம்
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினம் கொண்டாட்டப்பட்டது.;
புதுடெல்லி,
இந்தியாவின் 78- வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றுகிறார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சுதந்திர தினம் இன்று கொண்டாட்டப்பட்டது. தூதரக பொறுப்பு அதிகாரி அந்நாட்டின் தேசியக் கொடியை ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.