சுதந்திர தினம்; காஷ்மீரில் 750 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடி பேரணி
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள உலகின் உயர்ந்த ரெயில்வே பாலம் மீது 750 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடியை சுமந்தபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.;
ரியாசி,
நாடு முழுவதும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக வீடுதோறும் மூவர்ண கொடியை ஏற்றும் நிகழ்வு கடைப்பிடிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மூவர்ண கொடி பேரணிகள் நடந்து வருகின்றன. நாடு மற்றும் விடுதலை போராட்ட வீரர்களின் மீதுள்ள அன்பு மற்றும் நேசம் ஆகியவற்றை விளக்கும் வகையில், அவரவர்களின் இடங்களில் இந்த பேரணியானது நடந்து வருகிறது.
இதேபோன்று, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் ஜீனப் ஆற்றின் மீது கட்டப்பட்டு உள்ள உலகத்தின் உயரிய ரெயில்வே பாலத்தின் மீது, 750 மீட்டர் நீளமுள்ள மூவர்ண கொடியை தலைக்கு மேலே சுமந்தபடி மாணவர்கள் பேரணியாக சென்றனர். அப்போது அவர்கள் வந்தே மாதரம் மற்றும் பாரத் மாதா கி ஜெய் என கோஷங்களை எழுப்பினர்.
அவர்களின் இந்த பேரணிக்கு போலீசார் முழு அளவில் பாதுகாப்பை வழங்கினர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வெளிவந்துள்ளது.