நெல் உள்பட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்வு - மத்திய அரசு
நெல்,சோளம்,பருப்பு வகைகள் உள்ளிட்ட 14 வகை பயிர்களின் கொள்முதல் விலை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
நெல் உள்ளிட்ட 14 வகையான காரிப் பருவ பயிர்களின் கொள்முதல் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ 100 உயர்த்தி ரூ2,040 ஆக அதிகரித்துள்ளது. 2022-23 ஆம் ஆண்டில் நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ100 உயர்த்தப்பட்டுள்ளது. எள் குவிண்டாலுக்கு ரூ 523, பாசி பருப்பு குவிண்டாலுக்கு ரூ 480 உயர்த்தியும் சூரியகாந்தி விதை குவிண்டாலுக்கு ரூ 385 உயர்த்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய மந்திரி அனுராக் தாகூர் அறிவித்தார்.