திருப்பதியில் பெண் ஆட்டோ ஓட்டுநர்களின் எண்ணிக்கை உயர்வு

ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஆட்டோ ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Update: 2023-04-25 16:40 GMT

திருப்பதி,

ஆந்திர மாநிலம் திருப்பதியில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் தனிமையாக்கப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பெற்றோர் இல்லாதவர்கள், விவாகரத்தாகி குடும்பத்தை நடத்துபவர்கள் என பலர் உள்ளனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ராஸ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சில பெண்களுக்கு பயிற்சி அளித்து ஆட்டோ ஓட்டுநர் உரிமம் வழங்கி வங்கி கடன் மூலம் ஆட்டோக்களை வாங்கி கொடுத்துள்ளனர். அவர்கள் நாளொன்றுக்கு 700 முதல் 1,000 ரூபாய் வரை சம்பாதித்து குடும்பத்தை நடத்த தொடங்கினர்.

அவர்களிடம் இருந்து உத்வேகம் பெற்ற பலர் ஆட்டோ ஓட்ட கற்றுக் கொண்டனர். இதனால் திருப்பதியில் தற்போது ஆட்டோ ஓட்டும் பெண்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்