சிலிண்டர் இணைப்புக்கான டெபாசிட் தொகை உயர்வு - இன்று முதல் அமல்
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை 750 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கான டெபாசிட் தொகை 750 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது..
14.2 கிலோ எடை கொண்ட ஒரு சிலிண்டரைப் பெறுவதற்கு டெபாசிட் தொகை 1450 ரூபாய் என்று இருந்த நிலையில், இனி 2200 ரூபாய் செலுத்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. அதே போன்று இரு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற 4400 ரூபாய் செலுத்த வேண்டும்.
5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான டெபாசிட் தொகையும், 800 ரூபாயில் இருந்து 1150 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் ரெகுலேட்டரின் விலையும் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.