காங்கிரஸ் முன்னாள் மந்திரியின் உறவினர் வீட்டில் வருமானவரி சோதனை

சித்ரதுர்காவை சேர்ந்த முன்னாள் மந்திரியின் உறவினர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

Update: 2023-01-05 18:45 GMT

சிக்கமகளூரு:-

சொத்து குவிப்பு

சித்ரதுர்கா மாவட்டம் ஒலல்கெரே அருகே பாடிகட்டே கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் மந்திரி ஆஞ்சநேயா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவரது உறவினர் சுரேஷ். இவரது மனைவி அரசு ஊழியராக பணியாற்றி வருகிறார். மேலும் சுரேஷ் முன்னாள் மந்திரி ஆஞ்சநேயாவின் ஆதரவாளராகவும் செயல்பட்டு வந்தார்.

ஆஞ்சநேயா உதவியுடன் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை தனது சகோதரரான திப்பே சாமி பெயரில் அரசு பணிகளை குத்தகைக்கு எடுத்து செய்து வந்தார். இதில் அதிகளவு முறைகேடு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த முறைக்கேட்டில் சுரேஷிற்கு நேரடி தொடர்பு இருந்தது. ஏராளமான சொத்துகளை வாங்கி குவித்திருந்தார்.

வருமான வரித்துறை சோதனை

இந்நிலையில் சுரேஷ் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகளை வாங்கி குவித்ததாக வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சுரேஷிற்கு சொந்தமான வீடு, அலுவலகம், சகோதரர் மற்றும் உறவினர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பொருட்கள், சொத்து ஆவணங்கள் சிக்கின. அவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றனர். இது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்