சித்ரதுர்கா நெடுஞ்சாலையில் அதிகரிக்கும் வழிப்பறி சம்பவங்கள்: கூடுதல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பு தீவிரம்

சித்ரதுர்கா நெடுஞ்சாலையில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து போலீசார் கூடுதல் ரோந்து வாகனங்கள் மூலம் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-07-16 15:07 GMT

சிக்கமகளூரு;

ரூ.64 லட்சம் பொருட்கள்

சித்ரதுர்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரசுராம் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

சித்ரதுர்கா-பெங்களூரு-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களில் மட்டும் 4 வழிப்பறி சம்பவங்கள் நடந்துள்ளது. இதுதொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் கடந்த 2 தினங்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள் ஏற்றி வந்த லாரியை வழிமறித்த மர்மநபர்கள், டிரைவர், கிளீனரை தாக்கி, கட்டிப்போடுவிட்டு, லாரியில் இருந்த டி.வி., செல்போன் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருட்களை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர்.

அதுதொடர்பான புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.64 லட்சம் ஆகும்.

கூடுதல் ரோந்து வாகனங்கள்

சித்ரதுர்கா தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதனை தடுக்கவும், நெடுஞ்சாலையில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் கூடுதல் ரோந்து வாகனங்களில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்