' புதிய பாராளுமன்றம் திறப்பு' - உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வாழ்த்து.

புதிய பாராளுமன்றம் கட்டடம் திறப்பு விழாவை முன்னிட்டு உ.பி.முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.;

Update: 2023-05-28 06:09 GMT

லக்னோ,

இந்தியாவின் புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழா டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இதனால் டெல்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், லோக்சபா அறையில் வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை நிறுவினார்.

பாரம்பரிய உடை அணிந்து, புதிய பாராளுமன்றத்திற்கு நுழைவாயில் எண் 1-ல் இருந்து வந்த பிரதமர் நரேந்திர மோடியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வரவேற்றார்.

கர்நாடகாவைச் சேர்ந்த சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த பூசாரிகளின் வேத முழக்கங்களுக்கு மத்தியில், புதிய பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி "கணபதி ஹோமம்" செய்தார்.

இந்நிலையில், புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு உத்திரபிரதேச முதல்-மந்திடி யோகி ஆதித்யநாத் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

வரலாற்று நிகழ்வு. புதிய இந்தியாவின் நம்பிக்கை, எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பத்தை நிறைவேற்றியதன் அடையாளமாகவும்  புகழ்பெற்ற மற்றும் எழுச்சியூட்டும் நிகழ்வாகவும்  புதிய பாராளுமன்றம் பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்