புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா: டெல்லி காவல்துறை ஆலோசனை

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை முன்னிட்டு டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-25 09:09 GMT

புதுடெல்லி,

டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28-ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் தான் திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதுடன், இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த திறப்பு விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து டெல்லி காவல்துறை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறக்க உள்ள நிலையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெறுகிறது.

இந்த ஆலோசனையில் டெல்லி எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகளை அமைப்பது உள்ளிட்டவை குறித்தும், கண்காணிப்பு பணிகள், மல்யுத்த வீரர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மே 28 இல் மகளிர் அமைப்பு பேரணி செல்லும் நிலையிலும் ஆலோசனை நடத்தப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்