அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா; நொய்டாவில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-01-21 21:18 GMT

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா 22-ந்தேதி(இன்று) நடைபெற உள்ளது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இதனை முன்னிட்டு உத்தர பிரதேச மாநில அரசு அயோத்தி நகரில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. டிரோன்கள், சி.சி.டி.வி. கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவில் சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கமிஷனர் லட்சுமி சிங் தெரிவித்துள்ளார். மேலும் தரைவழி கட்டுப்பாடு, சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்