விஜயாப்புரா டவுனில் லேசான நிலநடுக்கம்

விஜயாப்புரா டவுனில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.;

Update: 2022-10-01 22:25 GMT

பெங்களூரு: கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டத்தில் கடந்த மாதம் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் விஜயாப்புரா டவுன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று அதிகாலை நேரங்களில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அதன் தாக்கம் லேசாக மட்டுமே உணரப்பட்டது.

எனினும், பயங்கர நிலநடுக்கம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். விஜயாப்புராவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவானது. இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்