திருட்டு வழக்குகளில் தமிழக தம்பதி கைது
திருட்டு வழக்குகளில் தமிழக தம்பதி கைது செய்யப்பட்டனர்.;
பெங்களூரு: பெங்களூரு சேஷாத்திரிபுரம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் (வயது 36), அவரது மனைவி ரீனா (34) ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர். இவர்கள் 2 பேரும் வீட்டு வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகிறதா? என்று கேட்டு செல்வார்கள்.
அப்போது அங்கு தனியாக பெண்கள் இருந்தால், அவர்களது கவனத்தை திசை திருப்பி வீட்டில் இருந்து நகை, பணத்தை திருடுவதை தொழிலாக வைத்திருந்தார்கள். தாங்கள் வேலை செய்யும் வீட்டில் உரிமையாளர்கள் இல்லாத போது நகை, பணத்தையும் திருடி வந்தனர். தம்பதி கொடுத்த தகவலின் பேரில் பல்வேறு வீடுகளில் திருடிய 512 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். தம்பதியிடம் சேஷாத்திரிபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.