இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேருக்கு கொரோனா
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,21,538பேர் குணமடைந்து வீடு திரும்பியனர்.;
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர்களின் எண்ணிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில்;
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 842 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,46,64,810பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிதாக தொற்றால் 6 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 5,30,520 ஆக உள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 4,41,21,538பேர் குணமடைந்து வீடு திரும்பியனர்.
தற்போது 12,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் நேற்று மட்டும் 1,38,075 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது