கட்சியின் நலன் கருதி பா.ஜனதா மேலிடம் நல்ல முடிவு எடுக்கும்- முன்னாள் மந்திரி சி.டி.ரவி பேட்டி

மாநில தலைவர், எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயத்தில் கட்சியின் நலன் கருதி பா.ஜனதா மேலிடம் நல்ல முடிவு எடுக்கும் என்று முன்னாள் மந்திரி சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

Update: 2023-08-09 18:45 GMT

பெங்களூரு:-

முன்னாள் மந்திரி சி.டி.ரவி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் அரசியலில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது குறித்து எங்கள் கட்சி மேலிடத்திற்கு அனைத்து தகவல்களும் தெரியும். கட்சியின் மாநில தலைவர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதவி விஷயத்தில் பா.ஜனதா மேலிடம் கட்சியின் நலன் கருதி நல்ல முடிவு எடுக்கும். மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் கர்நாடகத்திற்கு தேசிய அளவில் அதிக பிரதிநிதித்துவம் உள்ளது. கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்திய மந்திரி பிரகலாத்ஜோஷி ஆகியோர் உள்ளனர். அவர்கள் அரசியல் நிலவரம் குறித்து எடுத்துக் கூறுவார்கள். அதனால் கர்நாடகத்தில் இருந்து டெல்லி செல்லும் தலைவர்கள் இங்குள்ள அரசியல் நிலவரம் குறித்து மட்டுமு் பேசுவார்கள் என்று சொல்வது தவறு. நான் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தபோது எனக்கு ஒத்துழைப்பு வழங்கிய தலைவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன். என்னை தேசிய பொறுப்பில் இருந்து விடுவித்ததால் அவர்களுக்கு நன்றி சொல்வது எனது கடமை.

இவ்வாறு சி.டி.ரவி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்