விவசாயி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

விவசாயி கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

Update: 2022-09-27 22:11 GMT

கலபுரகி: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா தர்மவாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன்நாத். விவசாயி. இவர் கடந்த 2020-ம் ஆண்டு அந்த பகுதியில் உள்ள வெளிவட்ட சாலையில் சென்று கொண்டிருந்தபோது, தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து சவுக் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான ஜாவிட் மட்ராசப் என்பவரை கைது செய்தனர்.


அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கின் விசாரணை கலபுரகி மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையை போலீசார் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி, ஜாவிட் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் மற்றும் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்