பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

பெண்ணிடம் நகை பறித்த வழக்கில் 23 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2023-07-27 18:45 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் உல்லால் பகுதியை சேர்ந்தவர் பஷிர் (வயது51). கடந்த 2000-ம் ஆண்டு உருவா பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பஷிர், உசேன், மொய்தீன் ஆகிய 3 பேர் நகையை பறித்து விட்டு சென்றனர். இதுகுறித்து அந்த பெண் உருவா போலீசில் புகார் அளித்தார். அதன்போில் வழக்குப்பதிவு செய்து உசேன், மொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய பஷிர் தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. அவரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் கோர்ட்டு பஷிரிக்கு பிடிவாரண்டு பிறப்பித்தது. இதையடுத்து அவரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில், உல்லால் பகுதியில் பஷிர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த பஷிரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்